இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

தூசி அருகே வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் தொழிலாளி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண். இவர் வெம்பாக்கத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி மாங்கால் கூட் ரோட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இளம்பெண் கடந்த 20-ந் தேதி மாலை பணி முடித்து தனது நண்பர் ஒருவருடன் ேமாட்டார்சைக்கிளில் வெம்பாக்கத்தில் உள்ள பெண் காப்பக விடுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

பாலியல் தொல்லை

அப்போது தூசி அருகே சித்தாத்தூர் கிராமம் வழியாக நமண்டி ஏரிக்கரை அருகே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர், அவர்களை மடக்கி ஆண் நண்பரை தாக்கி, கட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய இளம்பெண்ணை 3 பேரும் விரட்டி சென்றனர்.

பின்னர் 3 பேரும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்து இளம்பெண் தப்பி ஓடிவந்தார். அப்போது அங்கு ஆள் நடமாட்டம் இருக்கவே 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்து இளம்பெண் தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவடிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), ரஞ்சித்குமார் (27), விக்னேஷ் (21) ஆகிய 3 பேரையும் கைது ெசய்தனர்.

பின்னர் 3 பேரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story