சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியை கரூரை சேர்ந்த கூலி தொழிலாளியான தங்கவேல் (வயது 57) என்பவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story