சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் இவர் 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story