பிளஸ்-1 மாணவனுக்கு பாலியல் தொல்லை


பிளஸ்-1 மாணவனுக்கு பாலியல் தொல்லை
x

பிளஸ்-1 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், திருச்சியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு பிளஸ்-1 படிக்கும் மகன் உள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவனை தாயார் முன்னிலையில் நிர்வாணமாக்கி அவருக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவன் மன இறுக்கத்துடன் இருந்துவந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின்பேரில், சரவணன் மற்றும் சிறுவனின் தாய் மீது போக்சோ பிரிவின் கீழ் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story