பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
x

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

முசிறி:

முசிறி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மோகன்தாஸ்(வயது 35). இவர், சம்பவத்தன்று மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வைத்ததாகவும், அந்த விடைத்தாள்களை பெற்று தன்னிடம் கொடுக்குமாறு குறிப்பிட்ட 3 மாணவிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது. அதன்படி அந்த மாணவிகள் விடைத்தாள்களை பெற்று ஆசிரியரிடம் கொடுக்க சென்றபோது, அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மோகன்தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவருக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story