மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியர் பணியிடை நீக்கம்
x

இரணியல் அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

8-ம் வகுப்பு மாணவன்

இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அருள் ஜீவன் (வயது47) எனது மகனுடன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று மதியம் எனது மகன் உணவு சாப்பிட்டு விட்டு கழிவறைக்கு சென்று விட்டு வந்தான். அப்போது ஆசிரியர் எனது மகனின் தோளில் கையைப்போட்டு ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவனை தகாத உறவில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து எனது மகன் எங்களிடம் கூறி அழுதான்.

பணியிடை நீக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தோம். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆசிரியர் தலைமறைவானார்.

இந்தநிலையில் ஆசிரியர் அருள் ஜீவனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story