கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு


கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
x

அம்பை பகுதியில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பாசமுத்திரம் காசிநாதர் கோவில், அம்மையப்பர் கோவில், வீர மார்த்தாண்டேஸ்வரர் கோவில், ஊர்க்காடு திருக்கோஷ்டியபர் கோவில், அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில், மயிலானந்த சுவாமி கோவில், திருமூலநாதர் கோவில், சின்ன சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கோமதி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

1 More update

Next Story