திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000 ஆக உயர்வு - இன்று முதல் அமல்
இன்று முதல் சண்முகார்ச்சனை கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த கோவிலி சண்முகார்ச்சனை நடத்துவதற்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப சண்முகார்ச்சனை கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு திங்கள்கிழமை(இன்று) முதல் அமலுக்கு வருவதாக கோவில் இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story