கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 5 பெண்கள் படுகாயம்


கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 5 பெண்கள் படுகாயம்
x

கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தில் இருந்து நேற்று காலை டிரைவர் மாரி (வயது 36) என்பவர் ஓட்டிச்சென்ற ஷேர் ஆட்டோவில் அதே கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் பயணம் செய்தனர். மேல்முதலம்பேடு கிராமம் அருகே ஆட்டோ சென்றுகொண்டிருந்த போது, சாலையோர பள்ளத்தில் அந்த ஷேர் ஆட்டோ கட்டப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஏ.என்.குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி (55), விஜயா (60), வைலட் (56), நிர்மலா (56), ரோஸ் (54) ஆகிய 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கவரைப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story