ஷேர்ஆட்டோ-கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலிதந்தை கண் முன்னே பரிதாபம்


ஷேர்ஆட்டோ-கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலிதந்தை கண் முன்னே பரிதாபம்
x

கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி நேருக்கு நேராக மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் தந்தை கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

ஆந்திர மாநிலம் சத்யவேட்டை சேர்ந்தவர் முரளி (வயது 36). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் திலீப் குமார் (17). ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஷேர் ஆட்டோவில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பொம்மாஜிகுளம் பகுதிக்கு தனது மகன் திலீப்குமாருடன் வந்து விட்டு மீண்டும் சத்யவேடு நோக்கி முரளி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பொம்மாஜிகுளம் போலீஸ் சோதனை சாவடி அருகே சாலையோரம் தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி விட்டு முரளி, இயற்கை உபாதை கழிக்கச்சென்றார். ஆட்டோவில் திலீப்குமார் மட்டும் அமர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், சத்யவேட்டில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உடல் நசுங்கிய கல்லூரி மாணவர் திலீப்குமார், தனது தந்தை முரளி கண் முன்பே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story