அரசு பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம்; அமைச்சர் முத்துசாமி வழங்கினார்


அரசு பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம்; அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
x

அரசு பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம்; அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோடு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய 89 பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம், பரிசு வழங்கினார். மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விபத்தில் தாய், தந்தையை இழந்த தொடக்க பள்ளிக்கூடங்களில் படிக்கும் 10 மாணவ-மாணவிகளுக்கு விபத்து காப்பீடு நிதி உதவியாக தலா ரூ.75 ஆயிரத்துக்கான அசல் ஆவணங்களையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன், மாவட்ட கல்வி அதிகாரிகள் புருஷோத்தமன், திருநாவுக்கரசு, ஜோதிசந்திரா, ரவிச்சந்திரன் மற்றும் பள்ளிகூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story