கப்பல் சார்ந்த தொழிற்பயிற்சி வகுப்புகள்


கப்பல் சார்ந்த தொழிற்பயிற்சி வகுப்புகள்
x

மீனவ மாணவர்களுக்கு கப்பல் சார்ந்த தொழிற்பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

திருவாரூர்

திருவாரூர்;

மீனவ மாணவர்களுக்கு கப்பல் சார்ந்த தொழிற்பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தொழிற் பயிற்சி

மத்திய மீன் வளம், கடல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் மூலம் மீனவ சமுதாயத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு கப்பல் நேவிகேட்டர் படிப்பு மற்றும் மரைன் பிட்டர் தொழிற்பயிற்சி வகுப்புகள் புதுடெல்லி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் அளிக்கப்படுகிறது.இதற்குரிய பயிற்சி வகுப்பு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.இந்த பயிற்சி வகுப்பில் சேர 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதியுடன் 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.

25-ந் தேதிக்குள்...

ஆதி திராவிடர் பழங்குடியின பிரிவினருக்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். கப்பல் நேவிகேட்டர் படிப்பு-க்கு 12 இடங்களும் மற்றும் மரைன் பிட்டர் கோர்ஸ்-க்கு 12 இடங்களும் என மொத்தம் 24 இடங்களுக்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுடைய மீனவ சமுதாய மாணவர்கள் www.cifnet.gov.in இணையதள முகவரியில் வருகிற 25-ந் தேதிக்குள்(செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story