`தினத்தந்தி' செய்தி எதிரொலி: நல்லூர் ரேஷன் கடை முன் தேங்கிய மழைநீர் அகற்றம்
`தினத்தந்தி' செய்தி எதிரொலி: நல்லூர் ரேஷன் கடை முன் தேங்கிய மழைநீர் அகற்றம்
நாமக்கல்
கந்தம்பாளையம்:
நல்லூரில் உள்ள ரேஷன் கடையில் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குட்டை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் ரேஷன் கடையின் முன் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
தற்போது செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பணியாளர்கள் மூலம் டிப்பர் லாரியில் மண் எடுத்து வந்து கொட்டி மேடு பகுதியாக செய்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story