மார்த்தாண்டம் அருகே பாத்திர கடையின் பூட்டை உடைத்து திருட்டு


மார்த்தாண்டம் அருகே பாத்திர கடையின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே பாத்திர கடையின் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது50). இவர் அந்த பகுதியில் பாத்திர கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் வெண்கலம், அலுமினியம், எவர்சில்வர் உள்ளிட்ட பாத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ரவி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் அவர் கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், வார்ப்பு உள்ளிட்ட சில பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இரவில் யாரோ மர்ம நபர்கள் ஷட்டர் பூட்ைட உடைத்து பாத்திரங்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு ெசய்து வருகிறார்கள்.

1 More update

Next Story