மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு


மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு
x

நெல்லை சந்திப்பில் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வீரபாகு. இவர் அங்கு மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். நேற்று காலையில் வீரபாகு வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுமார் ரூ.75 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story