தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில்வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டி `சீல்'


தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில்வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டி `சீல்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி தொகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி மூலம் நோட்டீஸ் கொடுத்தும் சில கடை உரிமையாளர்கள் வாடகை தொகை செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் நடேசன், இளநிலை உதவியாளர் தேவராஜ், ரவிகுமார், அலுவலக உதவியாளர் முனிராஜ் மற்றும் அதிகாரிகள் வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

அப்போது சிலர் வாடகை பாக்கியை செலுத்தினர். மேலும் சிலர் 2 நாட்களில் செலுத்தி விடுவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தனர். இதன் மூலம் நிலுவை தொகை வசூலானது.


Next Story