பாபர் மசூதி இடிப்பு தினம்: பொதக்குடியில் கடைகள் அடைப்பு


பாபர் மசூதி இடிப்பு தினம்:  பொதக்குடியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 7:15 PM GMT (Updated: 6 Dec 2022 7:15 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பொதக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டன.

திருவாரூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரித்தனர். இதனையொட்டி பொதக்குடியில் கடைவீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்கு கூத்தாநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story