ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி


ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடந்தது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு இணைப்பு பாடப் பயிற்சி என்ற தலைப்பில் ஒருநாள் குறுவளமையப் பயிற்சி, ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தொடங்கி வைத்து, இணைப்பு பாட பயிற்சி பற்றியும், மாணவர்களின் கற்றல் அடைவுநிலை, கற்பித்தல் உத்திகள், மாணவர்களை உற்சாகப்படுத்துதல், கேள்விகள் தயாரித்தல் போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மாரிமுத்து, அரியலூர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஆகியோர் பயிற்சி பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா கலந்து கொண்டார். ஆண்டிமடம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பயிற்றுனர்கள் சத்தியபாமா, அகிலா ஆகியோரும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய பயிற்றுனர்கள் ஆசைத்தம்பி, ரமேஷ், வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உத்திராபதி, கார்த்திகேயன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இந்த பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story