ஒரு முனை மின் இணைப்புக்கான மீட்டர் தட்டுப்பாடு


ஒரு முனை மின் இணைப்புக்கான மீட்டர் தட்டுப்பாடு
x

ஒரு முனை மின் இணைப்புக்கான மீட்டர் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 4 மாதங்களாக ஒருமுனை மின் இணைப்பு பெறுவதற்கான மீட்டர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் புது வீடு கட்டியவர்கள் மின் இணைப்பு பெறாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் புதிய வீடு கட்டியவர்கள் வீட்டை வாடகைக்கு கூட விடமுடியாமலும், தொழில் தொடங்குபவர்கள் தொழில் தொடங்க முடியாத நிலையிலும், கட்டிடம் கட்ட வேண்டியவர்கள் தற்காலிக இணைப்பு பெற முடியாத நிலை நீடிக்கிறது. எனவே உடனடியாக மின் இணைப்பு பெறுவதற்கான ஒரு முனை மின் மீட்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story