சென்னையில் வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்..!
சென்னையில் வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ. சங்கரை 3 பேர் இரும்பு கம்பியால் தாக்கினர்.
சென்னை,
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்தும், அபராதம் விதித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த எஸ்.ஐ. சங்கர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது பைக்கில் இருந்த 3 பேர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் காயமடைந்த எஸ்.ஐ. சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story