கல்வராயன்மலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது


கல்வராயன்மலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கோவிந்தன்(வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராஜசேகர்(40) என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், கோவிந்தன் தனது தம்பிகள் கலியமூர்த்தி, சங்கர், தாய் உண்ணாமலை, மனைவி சுசிலா ஆகியோருடன் நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்கள் பாலகிருஷ்ணன், பாபு ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அாிவாள் வெட்டு

இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர், தான் வைத்திருந்த அரிவாளால், உண்ணாமலை, கலியமூர்த்தி, சங்கர் ஆகியோரை வெட்டினார். இதை தடுக்க வந்த சுசிலாவையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது கரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story