சித்தா தின விழிப்புணர்வு ஓட்டம்


சித்தா தின விழிப்புணர்வு ஓட்டம்
x

பாளையங்கோட்டையில் சித்தா தின விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

அகத்தியர் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் சித்தா தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் அகத்தியர் பிறந்த தினமான ஜனவரி 9-ந் தேதி தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பாளையங்கோட்டையில் சித்தா விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் மனித சங்கிலி நடந்தது. சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தாமரியா தலைமை தாங்கினார். டாக்டர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார். மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஓட்டமானது பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கி, வ.உ.சி. மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. பின்னர் கல்லூரி வளாகத்தில் மனித சங்கிலி நடந்தது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவ கல்லூரியின் உறைவிட மருத்துவர் ராமசாமி, சித்த மருத்துவர்கள் வனிதா, பூமாதேவி, ருக்மணி, நடராஜன், ராஜாசங்கர், பபிதா பர்வீன், ராம்குமார், உமா அற்புதசெல்வி, பேராசிரியர்கள் அப்துல்காதர் ஜெய்லானி, ராஜராஜேஸ்வரி, ராஜகுமாரி, அன்பு மலர் சுல்வி நிஹார், திருமாவளவன், முத்துக்குமார், வேங்கடப்பன் மல்லிகா, பாலமுருகன், இசக்கி பாண்டியன், சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story