சித்த மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


சித்த மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 24 March 2023 12:30 AM IST (Updated: 24 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே சித்த மகாலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டையை அடுத்த எஸ்.மேட்டுப்பட்டி அருகே, சித்தர்கள் மலையில் சித்த மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் தலைமையில் யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதன்பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் மலைப்பாதையில் 1,500 படிகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story