சித்திவிநாயகர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சித்திவிநாயகர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சித்திவிநாயகர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் வங்க நகரம் கிராமத்தில் சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. இதையடுத்து 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் காமாட்சி அம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வங்கநகரம் கிராமத்தார்கள், ஒப்பரைதாரர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story