முற்றுகை போராட்டம்


முற்றுகை போராட்டம்
x

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு லிங்கம்பட்டி சமத்துவபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.பாஸ்கரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். வீடு இல்லாத ஏழை மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து கலைந்து சென்றார்கள்.

1 More update

Next Story