ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்


ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
x

ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு.

ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் இளைஞர்கள் விளையாடி தங்களது உடல் திறனை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நொளம்பை கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணன் என்பவர் அந்த பகுதியில் சொந்த வீடு கட்டி உள்ளார். அந்த வீடு விளையாட்டு மைதானத்தின் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விளையாட்டு மைதான பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை தாசில்தார் பாலமுருகன் சமரசப்படுத்தினார். அப்போது இது தொடர்பான கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்று்கொண்ட தாசில்தார் விளையாட்டு மைதான பகுதியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலமுருகன் கூறினார். அதன் பின் இளைஞர்களும் ஊர் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story