நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திருச்சியில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திருச்சியில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திருச்சியில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கையெழுத்து இயக்கம்
"நீட் விலக்கு" "நம் இலக்கு" கையெழுத்து இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று குடியரசு தலைவருக்கு தபால் கார்டு அனுப்பும் பணி குறித்து தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக தன்னார்வலர்கள் மற்றும் தி.மு.க.வினரிடம் கலந்துரையாடினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இட ஒதுக்கீடாக இருந்தாலும், இந்தி எதிர்ப்பாக இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டமாக இருந்தாலும் நமது தமிழ்நாடு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் எப்பொழுதும் தி.மு.க. முதல் குரல் கொடுக்கும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். அப்போது, நீட் தேர்வுக்கான விலக்கையும் பெற்று தருவோம் என்றார்.
நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் தி.மு.க. மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய மாவட்டம்
இதுபோல் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தில்லைநகரில் உள்ள முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நீட்டுக்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் தபால் கார்டில் கையெழுத்திட்டு அதனை அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர். பின்னர் நீட் விலக்கு கோரி பொதுமக்களிடம் தபால் கார்டில் கையெழுத்து பெற்று, குடியரசு தலைவருக்கு தங்களது வேண்டுகோளை தபால் கார்டு மூலம் அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டனர்.