கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கம் நடந்தது.
திருச்சி
ஸ்ரீரங்கம்:
தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும், போதை கலாசாரத்தால் சீரழியும் மாணவர்களையும், இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரசார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
Related Tags :
Next Story