பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம்


பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம்
x

தெள்ளாரில் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தெள்ளாறு போலீஸ் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மகளிர் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் 1,000- க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்தை பெற்றனர். இந்த கையெழுத்தை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என கூறினர்.


Next Story