கவர்னரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
கவர்னரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் குத்தாலத்தில் நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் ஆடுதுறை முருகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொளஞ்சி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தி.மு.க. குத்தாலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அழகிரி, உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., தி.க.,வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கட்டிட தொழிலாளர்கள் சங்கம், சமூக நல அமைப்புகள், குத்தாலம் வணிகர் சங்க பேரவை உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.