விண்வெளித்துறை மேம்பாட்டுக்காக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து -தமிழக அரசு நடவடிக்கை


விண்வெளித்துறை மேம்பாட்டுக்காக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து -தமிழக அரசு நடவடிக்கை
x

விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.

சென்னை,

குஜராத்தில் கடந்த 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட நிறுவனமும் பங்கேற்றது.

விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி மற்றும் இந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டம் குறித்தும் கண்காட்சி அரங்கில் விளக்கப்பட்டது.

கருத்தரங்கு

கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரமோஸ் விண்வெளி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சிவதாணு பிள்ளை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

'விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் உலகளாவிய அளவில் முக்கிய இடத்தில் இருக்கும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

6 ஒப்பந்தங்கள்

விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களுடன் தமிழக அரசு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story