விநாயகர் சிலைகள் வைத்து பூைஜ
காங்கயம் தாலுகா பகுதி முழுவதும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று 15-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் காங்கயம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் 12 விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் மயில்மீது அமர்ந்த விநாயகர், பசுமீது அமர்ந்த விநாயகர், சிங்கத்ததின் மீது அமர்ந்துள்ள விநாயகர், ஆஞ்சநேய விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட உள்ளது. மாலை 3 மணியளவில் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பழையகோட்டை ரோடு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கயம் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் செய்து வருகின்றனர்.