பசும்பொன் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம்: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த ஓ.பி.எஸ்?


பசும்பொன் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம்: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த ஓ.பி.எஸ்?
x

ஓ.பன்னீர் செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம்,

முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது. ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.


Next Story