சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்
சிங்கப்பூர்,
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று காலை சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனுடன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார். இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் அதில் பேசப்பட்டது. மேலும் செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் உதரி பாகங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கிறார் .