முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேசினார். விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சிதாராம் யெச்சூரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய நிலவரம், மதசார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்துரையாடினேன். பாஜகவை வீழ்த்த விருப்பமுள்ளவர்கள் ஒன்றினைய வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மாநிலகள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.