சிவகாசி மாநகராட்சி கூட்டம்


சிவகாசி மாநகராட்சி கூட்டம்
x

சிவகாசியில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். பொறுப்பு ஆணையாளர் சாகுல் அமீது வரவேற்று பேசினார். மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். சுமார் 30 நிமிடத்தில் மாநகராட்சி கூட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்துக்கு வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story