சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா


சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா
x
திருப்பூர்


காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

சிவன்மலை

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 1 மணிக்கு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான காப்பு கட்டுதல் சிறப்பாகும். சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவசிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாரர் சாமி கோவிலுக்கு சென்றார். இதில் தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெரும்.

பக்தர்கள் கூட்டம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவில் உள்பகுதி, ராஜகோபுரம் முன்பகுதி, வாகனம் நிறுத்தும் இடம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு வரை பக்கதர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். 30-ந் தேதி சூரசம்ஹாரா விழா மாலை 5 மணிக்கும், 31-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 2-ந் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் அன்னக்கொடி (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story