காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் 2-வது நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் 2-வது நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
x

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் 2-வது நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் 2-வது நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன்மலை கோவில்

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் தைப்பூசத் தேர் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு சிறிது தூரம் சென்றதும் மாலை 4.50 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

2-வது நாளான நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் தேர் நிலையை அடைகிறது. திருவிழாவையொட்டி காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்துவிரதம் இருந்து, காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவையொட்டி சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாட்டுடன் வந்த பக்தர்கள்

தேர்திருவிழாவில் பக்தர்கள் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளை தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது. ரூபாய் நோட்டுக்களை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். காவடி குழுவினர் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவன்மலை பகுதியில் ஆங்காங்கே கூடாரம் போட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 2-வது நாளான நேற்று வெள்ளிரவெளி காவடிக்குழு சார்பில் மலையடிவாரத்தில் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.


Next Story