கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது
கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
கோவை சாய்பாபா காலனி போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் ரோந்து பணி நடத்திய போது அங்கே கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சி ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23), கீரணத்தம் தனியார் கல்லூரி மாணவர் நந்தகுமார் (21), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சரவணம்பட்டி சகாரா சிட்டி ரோடு பகுதியில் காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கீரணத்தம் பகுதியை சேர்ந்த சதீஸ்வரன் (23), வடவள்ளி பகுதியை சேர்ந்த லோகநாதன் (20) ஆகிய இருவரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவர்களிலிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா பறிமுதல்
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ஜசீர் அகமது (19). கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (19). இவர்கள் காளப்பட்டி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது போலீசாரிடம் சிக்கினார். இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த பீளமேடு போலீசார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பல்வேறு வழக்குகள்
கைதானவர்களில் சக்திவேல், நந்தகுமார், ஜசீர் அகமது, சதீஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. சக்திவேல் மீது ஏற்கனவே கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.