முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு - வாலிபர் கைது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு - வாலிபர் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுப்பத்து பகுதியை சேர்ந்தவர் ஜெபின் (வயது 31). இவர் கன்னியாகுமரி கடற்கரையில் குதிரை வைத்து சவாரி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி தாமரைபாரதி தென்தாமரைக்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வீடியோ வெளியிட்ட ஜெபினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story