அமைச்சர் பற்றி அவதூறு: பாஜக நிர்வாகி கைது - அண்ணாமலை கண்டனம்


அமைச்சர் பற்றி அவதூறு: பாஜக நிர்வாகி கைது - அண்ணாமலை கண்டனம்
x

பாஜக நிர்வாகி கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக மாநில தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமாரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி செல்வகுமார் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை பாஜக தொண்டர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story