வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி


வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

கண்ணபிரான் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியில் கண்ணபிரான் கோவில் உள்ளது. இக்கோவிலில் கண்ணபிரான் பஜனை மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதையொட்டி கண்ணபிரானை அலங்கரித்து பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ெசன்றது.பின்னர் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து கண்ணபிரானுக்கு ஊஞ்சல் கட்டி மகா தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலையில் மறு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story