ஆலந்தூர் மெட்ரோ - குருநானக் கல்லூரி இடையே இன்று முதல் சிற்றுந்து பஸ் சேவை..!


ஆலந்தூர் மெட்ரோ - குருநானக் கல்லூரி இடையே இன்று முதல் சிற்றுந்து பஸ் சேவை..!
x

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இன்று முதல் சிற்றுந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்றுவருவதற்காக இணைப்பு சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இன்று (14-ம் தேதி) முதல் 2 இணைப்பு சிற்றுந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் சேவை திங்கள் முதல் வெள்ளி வரை ஆலந்தூரில் இருந்து காலை 5.25 மணி முதல் இரவு 8.57 மணி வரையிலும், குருநானக் கல்லூரியில் இருந்து காலை 5.55 மணி முதல் இரவு 9.29மணி வரையில் 35 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். பஸ்சில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story