சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனங்கள்


சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனங்கள்
x
தினத்தந்தி 22 Sept 2023 1:45 AM IST (Updated: 22 Sept 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் கிராந்திகுமார் தெடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் கிராந்திகுமார் தெடங்கி வைத்தார்.

பிரசார வாகனங்கள்

தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சிறு தானிய மற்றும் குறுந்தானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, பனி வரகு, குதிரைவாலி ஆகியவற்றின் பயன்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கலந்துகொண்டு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)சபி அகமது, கிணத்துக்கடவு வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தகுமார், வேளாண்மை துணை அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் 6 வாகனங்களில் பொதுமக்களுக்கு சிறுதானியங்கள் மற்றும் குறுந்தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



Next Story