சிறுதானிய சாகுபடி பயிற்சி முகாம்
சிறுதானிய சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தில் சிறு தானிய சாகுபடி முறைகள் குறித்து வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் தொடங்கி வைத்து சிறு தானிய சாகுபடியின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். வேளாண் துறையில் செயல்படும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பற்றியும் கூறினார்.
ராஜேஷ் கலந்துகொண்டு சிறு தானிய சாகுபடி சம்பந்தமான தொழில்நுட்ப கருத்துக்களை கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் பற்றியும், மாநில அரசின் மானிய திட்டங்கள் பற்றியும் பேசினார். ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திவ்யா, செல்வி, முத்து சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.