கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை


கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை
x

கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

திருப்பூர்

அருள்புரம்

திருப்பூர் அருகே டி.கே.டி.மில்லிருந்து கணபதிபாளையம் வழியாக செல்லும் சாலைபோக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் கரைப்புதூர் ஊராட்சி சென்னிமலைபாளையம் கே.எஸ். கார்டன் அருகே 1 வருடத்திற்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

-------------


Next Story