கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு 40 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது


கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு 40 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு 40 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் நகர மேற்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது, காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை சேர்ந்த காஜா உசேன் (வயது 42), பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த தீலிப் ராஜேஸ் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் கேரளா கொடுவாயூர் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பொள்ளாச்சியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 40 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story