678 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்
பெங்களூருவில் இருந்து 678 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வேனை நிறுத்தினர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் தங்கள் வாகனத்தில் துரத்தி சென்று வேனை மடக்கி பிடித்தனர். அந்த வேனை சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வேனில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் எம்மனஹள்ளியை ேசர்ந்த அப்பு (வயது 22), சச்சின் (22) என்றும், புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.
கைது
பின்னர் அவர்கள் கூம்பூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கூம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் சரக்கு வேன் மற்றும் 678 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.