கருங்கற்கள் கடத்தல்; லாரி பறிமுதல்
பிரம்மதேசம் அருகே கருங்கற்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்
பிரம்மதேசம்,
பிரம்மதேசம் அருகே உள்ள வெள்ளக்குளம் கூட்டு சாலையில் புவியியல் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் நிறுத்துமாறு டிரைவரிடம் சைகை காட்டினர். அதிகாரிகளை பார்த்ததும், டிரைவர் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு, இறங்கி தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சோதனை மேற்கொண்ட போது, 4 யூனிட் கருங்கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், கற்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story