தியாகதுருகத்தில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


தியாகதுருகத்தில்    காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தியாகதுருகம் புறவழிச் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வெள்ளிமலைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த வெள்ளிமலை அருகே எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிபாலன் (வயது 23), புளியந்துறை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் மூர்த்தி (24), எருக்கம்பட்டு ஆண்டி மகன் மூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 31 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 622 பீர், பிராந்தி பாட்டில்கள் மற்றும் கடத்தல்களுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story